Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரகுமான் இசையில் செக்கச்சிவந்த வானம் படத்தில் இருந்து “செவந்து போச்சு நெஞ்சு” பாடல் வெளியானது.!
இயக்குனர் மணிரத்தினம் காற்று வெளியிடை படத்திற்கு பிறகு இயக்கியுள்ள திரைப்படம் செக்கச் சிவந்த வானம் இந்த திரைப்படத்தில் சிம்பு, விஜய், அரவிந்த்சாமி, அருண் விஜய் , பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா, என மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது.

CCV
மேலும் படத்தில் விஜய் சேதுபதி போலீஸாக நடித்துள்ளார் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் படத்தை, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் என்ற மணிரத்தினத்தின் சொந்த நிறுவனமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
And #SevandhuPochuNenju audio is out now! Listen to it right away. @arrahman @MadrasTalkies_ @LycaProductions @vairamuthu
Wynk Music- https://t.co/gLksoG2bGj
Saavn –https://t.co/eHTebPnBlg
Gaana – https://t.co/X2tyCwaQIB
Hungama – https://t.co/ytFjUkkhHO pic.twitter.com/7QvLOkhVJ0— Sony Music South (@SonyMusicSouth) September 15, 2018
செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது, இந்தநிலையில் படத்தில் இடம்பெறும் செவந்து போச்சு நெஞ்சு என்ற பாடல் தற்போது வெளியிட்டுள்ளார்கள் இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது மேலும் படத்தை வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்
