பிரியங்கா விஷயம் தெரிந்து ஆரம்பத்திலேயே தலையில் தட்டிய செஃப் தாமு.. CWC 5-ல் இந்த எபிசோடை கவனிச்சீங்களா?

VJ Manimeghalai: யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என்று கண்ணதாசன் தன்னுடைய வரிகளில் சொல்லி இருப்பார். அப்படி ஒரு விஷயத்தை பிரியங்கா செய்திருந்தால் இப்போது இந்த அளவுக்கு பெயர் கெட்டுப் போய் இருக்காது.

பிரியங்காவிற்கு ஒரு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் இருந்தது. அவரை அதிகம் பேர் ரசிக்கிறார்கள் என்பதற்காக எல்லா நிகழ்ச்சியிலும் அவரை பங்கெடுக்க வைத்து ஏற்கனவே பாதிக்குப் பாதி பேர் வெறுப்பாகிவிட்டார்கள்.

இந்த நிலையில் மணிமேகலை பிரியங்காவால் தான் நான் குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறேன் என பதிவிட்டு அவருடைய பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து விட்டார். இன்று காலையில் இருந்து பிரியங்காவை பற்றி தான் எல்லா இடத்திலும் பேச்சாக இருக்கிறது.

இந்த எபிசோடை கவனிச்சீங்களா?

அது மட்டும் இல்லாமல் மணிமேகலை சொன்னது உண்மைதான் என ஆதாரமாக சில வீடியோக்களையும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதில் பிரியங்காவின் நடவடிக்கை தெரிந்து குக் வித் கோமாளியின் நடுவர் செஃப் தாமு அவரை சிரித்துக்கொண்டே கண்டிப்பது போல் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதாவது ஒவ்வொரு வாரமும் டாஸ்க் என்ன என்று நடுவர்கள் சொல்வார்கள். அப்படி ஒரு எபிசோடில் சொல்லிக் கொண்டிருக்கும்போது வழக்கம் போல பிரியங்கா ரொம்பவும் அதிக பிரசங்கித்தனமாக பேசுகிறார்.

அதற்கு செஃப் தாமு சிரித்துக்கொண்டே பிரியங்கா இது ஸ்டார்ட் மியூசிக் இல்ல, குக் வித் கோமாளி என அழுத்தம் திருத்தமாக சொல்கிறார். பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே இப்படி ஒரு மோதல் இருந்தது அவருக்கு தெரிய வந்ததால் தான் இப்படி தெளிவாக பேசி இருக்கிறார்

. செஃப் தாமு கடந்த நான்கு சீசன்களாக மணிமேகலையுடன் பயணித்து வருகிறார். எனவே கண்டிப்பாக மணிமேகலை எந்த மாதிரி விஷயத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் அதனால் தான் கேமரா முன்பே பிரியங்காவை கடந்திருக்கிறார் என்று மணிமேகலையின் ஆதரவாளர்கள் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள்.

பிரியங்கா மனசு வச்சா தான் விஜய் டிவியில் இருக்க முடியும்

- Advertisement -spot_img

Trending News