Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சைக்கிள் எனில், வேற மாதிரி வந்து கலக்கிய சீயான் விக்ரம்
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இறுதி கட்டத்தையம் எட்டிவிட்டது. தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்களுக்குரிய வாக்குச்சாவடியில் காலை முதலே ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். சாமானியர்களுடன் அவர்கள் சமமாக இருப்பது இது போன்ற நிகழ்வின் பொது தான்
அந்த வகையில் தல அஜித், சூர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பல நட்சத்திரங்களும் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் காலையிலேயே ஓட்டு போட வந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

vikram
விக்ரம் பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் விக்ரம் வாக்களித்தார்.அவர் நடந்தே வந்தார். ரசிகர்கள் கூட்டம் கூடியதை தொடர்ந்து, உடனடியாக அவரை வாக்களிக்க அனுமதித்தனர்.

vikram
வீட்டிற்கு அருகில் தான் வாக்குச்சாவடி. அதனால் அவர் நடந்தே சென்று வாக்களித்தார். அவர் சாலையில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது.

vikram
வரும் பொழுது செம்ம ஸ்டைலிஷாக இருந்த விக்ரம் ஓட்டு போட்டு முடித்து வேர்த்து விறுவிறுக்க அங்கிருந்து சென்றார்.
