செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.

ccv

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் லைகா ப்ரோடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரு நாயகர்கள் படம் என்றாலே அவரின் ரசிகர்கள் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி விடுவார்கள். ஆனால், இப்படத்தில் யங் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாக்லேட் பாய் அரவிந்த் சாமி என ஏகப்பட்ட நடிகர்கள், ஜோதிகா, ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் என நடிகைகளும் அதிகமாக இருக்கிறார்கள். இதனாலே படத்தின் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார். அதிலும், தற்போதைய சமூக சூழலில் படம் முக்கிய பிரச்சனையை கதை பின்னணியாக கொண்டு இருக்கும் என தெரிகிறது.

முதலில் தொடங்கப்பட்ட இப்படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார். எந்த படத்திலும் இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பில் முதல் ஆளாக கலந்து கொண்ட சிம்புவுக்கு படத்தின் ஒளிப்பதிவாளர் நல்ல பையன் சான்றிதழ் வேறு கொடுத்தார். தொடர்ந்து, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி ஆகியோர் தங்கள் காட்சிக்காக படப்பிடிப்புகளில் கலந்து கொண்டது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகும் போது எல்லாம் கருப்பு வெள்ளையில் வெளியானது தான் புரியாத புதிராகவே இன்று வரை இருக்கிறது. இதை தொடர்ந்து, விஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் காட்சியில் அபுதாபியில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.

அங்கு மணிரத்னத்துடன், விஜய் சேதுபதி எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் வைரலாக பரவி வரும் நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கடைசி கட்டத்தை நெருங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 90 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்புக்கு மூடுவிழா நடத்த இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளையும் முடித்து கொண்டு படத்தை இந்த வருட இறுதிக்குள் வெளியிட மணிரத்னம் தீவிரம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது. கண்டிப்பாக படம் மாஸ் எண்டர்டைன்மெண்ட் ஹிட் அடிக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை.