Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு கையில் புட்டி, ஒரு கையில் குட்டி.. என சுற்றித்திரிந்த காசியின் தற்போதைய நிலை, 180 பெண்களின் பாவம் சும்மா விடுமா!
நாகர்கோயிலில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அதன் மூலம் பணம் பறிப்பது போன்ற நாசவேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர் தான் காசி.
இவருக்கு வயது 26 தான். ஆனால் வாட்டசாட்டமான உடம்பை வைத்து கொண்டு தனது கொஞ்சலான பேச்சின் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை சிதைத்து உள்ளார்.
‘பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்’ என்பது போல தற்போது போலீசிடம் சிக்கிக் கொண்ட சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் காசியின் தற்போதைய நிலை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்படுகிறது.
ஏனென்றால் தனது கட்டுமஸ்தான உடலை வைத்துக்கொண்டு சோஷியல் மீடியாவில் பில்டப் விட்ட காசி, தற்போது போலீஸ் விசாரணை முடிந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது, எலும்பும் தோலுமாய், கையில் ஒரு கட்டை பையை வைத்துக்கொண்டு அங்கிருப்பவர்களை பார்த்தபடி சென்றார்.
இவருடைய இந்த நிலையை பார்க்கும் போது ‘ஆடிய ஆட்டம் என்ன..’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
அதைப்போல் 180 பெண்களுடைய பாவம் சும்மா விடுமா? என்று சமூக வலைதளங்களில் இவருடைய சமீபத்திய புகைப்படத்தை பார்த்ததும் தங்கள் கமெண்ட்டுகளை நெட்டிசன்கள் தெறிக்க விடுகின்றனர்.

nagarkovil-kasi
