Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீண்ட நாட்களுக்கு பிறகு மன்மதராசா பாடலுக்கு டான்ஸ் ஆடிய சாயா சிங்..
2003 ஆம் ஆண்டு தனுஷின் நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் திருடா திருடி. இளைஞர்களை கவரும் வகையில் திரைக்கதை அமைந்ததால் படம் சூப்பர் ஹிட் அடித்தது.
பெரும்பாலும் அந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது அந்த படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் தான். அந்த பாடல் வெளியானதிலிருந்து பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.
காதுகுத்து முதல் கல்யாணம், திருவிழா என அனைத்து இடங்களிலும் மன்மத ராசா பாடல் மட்டும்தான் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த அளவுக்கு பெரிய ஹிட் அடித்த அந்த பாடலில் தனுஷ் மற்றும் சாயாசிங் போட்டி போட்டு ஆடியிருப்பார்கள்.
சாயாசிங் 2012 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது சீரியல், குணச்சித்திர வேடம் என தொடர்ந்து சினிமாவிலும் சீரியலிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.
இந்நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தனது மன்மத ராசா பாடலுக்கு ஆடிய வீடியோ ஒன்றையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகிவிட்டது.
