நெட்டிசன்கள் விளாசியதால் அந்த விஷயத்திற்கு குட் பை சொன்ன சிம்பு பட நடிகை.. 1.3 மில்லியன் போச்சே!

ஒரு சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சார்மி கவுர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு, லாடம் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் 2015 ஆம் ஆண்டு விக்ரம் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான பத்து என்றத்துக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார்.

தற்போது நடிகையில் இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சார்மி பல்வேறு படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை தயாரிப்பாளராக 7 படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லிகர்’ படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருந்தார்.

இதுதவிர சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்த சார்மி, லாக்டவுன் காலத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது, தயாரிப்பு பணிகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். என்னதான் சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் பிற நடிகைகளை போல கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அதனை சார்மி தன்னுடைய சோசியல் மீடியாக்களில் பதிவிட்டது கிடையாது.

இந்நிலையில் தான் கடந்தாண்டு கொரோனா குறித்து கேலி செய்ததற்காக சார்மியை நெட்டிசன்கள் விளாசினர். அதுமட்டுமே சோசியல் மீடியாவில் சார்மியால் வெடித்த ஒரே ஒரு சர்ச்சை. அப்படியிருக்கும் போது சோசியல் மீடியாவை விட்டு விலகுவதாக திடீரென சார்மி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Charmy Kaur
Charmy Kaur

சார்மியை இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் பேரும், ட்விட்டரில் 6 லட்சத்திற்கும் அதிகமானோரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சார்மி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நல்ல விஷயத்திற்காக சோசியல் மீடியாவில் இருந்து சிறிது காலத்திற்கு பிரேக் எடுத்துக் கொள்கிறேன், சீ யூ கைஸ் என பதிவிட்டுள்ளார்.

Next Story

- Advertisement -