துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் சார்லி.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப் போவது உறுதி என்று பேசப்பட்டது. இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஏ எல் விஜய் இயக்குகிறார். இப்போது பிரபு தேவாவுக்காக டெவில் படத்தை இயக்கி வரும் அவர், அடுத்து ஜெயம் ரவி படத்தை முடிக்க வேண்டியுள்ளது. இந்தப் படங்கள் முடிந்ததும் சார்லி ரீமேக்கில் இறங்குகிறார்

அதிகம் படித்தவை:  அருவி புகழ் அதிதி பாலன் இதற்கு முன் அஜித் படத்தில் நடித்துள்ளார். அது என்ன படம் தெரியுமா?

படத்தின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். நவம்பர் 15-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமோத் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கறது.