கமல்ஹாசன் தற்போது சபாஷ் நாயுடு என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அண்மையில் இப்படத்தின் இயக்குனர் ராஜீவ் குமார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் படத்தை தானே இயக்குவதாக முடிவு செய்திருந்தார் கமல்ஹாசன்.

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் இதனால் அமெரிக்காவின் உளவுத்துறை அலுவலகத்தில் ஒருசில காட்சிகள் எடுக்க அமெரிக்க காவல்துறையிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நாளுக்குள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் கமல் உள்ளதாலும் திடீர் இயக்குனர் முடிவு என கூறப்படுகிறது.