‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தற்போது தனது மகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சபாஷ் நாயுடு எனும் காமெடி கலந்த ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை முதலில் ராஜீவ் குமார் இயக்குவதாக இருந்தது.

ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாததால் இப்படத்தை கமலே இயக்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது இப்படத்தின் எடிட்டர் மற்றும் ஒளிப்பதிவாளரும் சில காரணங்களால் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ளது. இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் தொடங்குகிறது.