Connect with us

Cinemapettai

ISRO தலைவர் சிவன் கட்டித்தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி.! வைரலாகும் வீடியோ

modi-sivan

India | இந்தியா

ISRO தலைவர் சிவன் கட்டித்தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி.! வைரலாகும் வீடியோ

சந்திராயன்-2, ISRO தலைவரான சிவனை நேரில் சந்தித்த நரேந்திர மோடி ஆரத்தழுவி தட்டிக்கொடுத்து அதை சார்ந்த குழுவினர்களுக்கு தங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தோல்வி கண்டாலும் பரவாயில்லை நாங்கள் துணை நிற்போம் என்பது போன்று மோடி நேரில் வந்து ஆறுதல் படுத்தி  சென்றுள்ளது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது. இது தோல்வி என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள் வெற்றிக்கான முதல் படி என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் இதுபோன்ற வெற்றி தொடரும் அடுத்த வருடத்தில் இதனை கண்டிப்பாக சாதிப்போம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ISRO தலைவர் சிவன் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி படித்து பெரும் இந்த சாதனை படைத்துள்ளார் என்பது பெருமை தான் தமிழனுக்கு. இந்த சாதனைக்கான வெற்றி விரைவில் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அனைத்து இந்தியர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இந்த  சாதனை தோல்வியடைந்தாலும் கூட விஞ்ஞானிகளுடன் ஒன்று சேர்ந்து நிற்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top