Tamil Cinema News | சினிமா செய்திகள்
சந்திரமுகி-2 படத்தில் ஜோதிகாவுக்கு பதில் இந்த ஹீரோயினா? மனசாட்சியே இல்லப்பா உங்களுக்கு!
ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.
ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அவரே வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சந்திரமுகி படம் ரஜினியின் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமைந்த படம். சந்திரமுகியாக ஜோதிகாவை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இதில் ஏதேனும் குளறுபடி அமைந்தால் அது ரஜினிக்கு பெரிய கெட்ட பெயரை உண்டாக்கும்.
சில படங்களை புத்திசாலித்தனமாக முதல் பாகத்திலேயே நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனென்றால் சமீபகாலமாக ஹிட்டடித்த படங்களின் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி கியாரா அத்வானி இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். ஜோதிகா கதாபாத்திரத்தில் இவரை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இரண்டாம் பாகத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் சந்திரமுகி 2 படத்தை எடுத்தால் மட்டுமே ரசிகர்கள் கொண்டாடுவார்கள். காஞ்சனா 3 படம் ஆக மாறி விடக்கூடாது என ரஜினி ரசிகர்கள் தினமும் கடவுளை வேண்டி வருகிறார்கள்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
