Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

எதிர்க்கட்சியில் நடந்த நாற்காலி சண்டை.. தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏ!

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் தான் சிவ பத்மநாபன் என்பவர். இவர் ஸ்டாலினின் ஆதரவாளராக இருந்து வருகிறார்.

மேலும் பூங்கோதை ஆலடி அருணா கனிமொழியின் ஆதரவாளராக திமுக கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் மாவட்ட செயலாளரான பத்மநாபன் மற்றும் அவரது ஆட்களின் துன்புறுத்தலால் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் பேசப்படுகின்றன.

அதாவது ஒரு கட்சி கூட்டத்தில் சிவ பத்மநாபன் ஆதரவாளர்கள் பலர் பூங்கோதையை கண்டபடி பேசியதாலும், தாக்கியதாலும் அவமானப் பட்டாராம் பூங்கோதை.

இதனால் பூங்கோதை தற்கொலை முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என பரவலாக சொல்லப்படுகிறது.

மேலும் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண் எம்எல்ஏக்களுக்கு உட்கார நாற்காலி கொடுக்கப்படவில்லை என்றும், அவரை வெளியே போக சொல்லி மாவட்டச் செயலாளரின் ஆட்கள் கூச்சலிட்ட தாலும் பெரிய சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்து என்னை என்னை விடுங்கள் என்று கூறிய பூங்கோதை வெளியே செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எனவே இவ்வாறு மாவட்ட செயலாளரான பத்மநாபன் செய்துள்ள செயல், எதிர்க்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய தோடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

stalin-dmk

stalin-dmk

Continue Reading
To Top