Connect with us
Cinemapettai

Cinemapettai

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நூறு ஏக்கரை ஆக்கிரமித்த மத்திய அரசு

velachery

Tamil Nadu | தமிழ் நாடு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நூறு ஏக்கரை ஆக்கிரமித்த மத்திய அரசு

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மத்திய அரசு நிறுவனங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது

பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அவர் அளித்த பரிந்துரையில் பள்ளிக்கரணை மற்றும் பெருங்குடி குப்பைக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

50 சதுர கிலோ மீட்டராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 30 ஆண்டுகளில் 3.17 சதுர கிலோ மீட்டராக குறைந்து விட்டதுதாக அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலம் தற்போது வெறும் 500 ஏக்கராக சுருங்கிவிட்டது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top