விவேக் மரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பு.. சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் விவேக். தன்னுடைய நகைச்சுவை மூலம் சிறந்த கருத்துக்களையும், தத்துவங்களையும், சமூக விழிப்புணர்வுகளையும் மக்களுக்கு புகுத்திவந்தார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்களான ஹரிஷ் கல்யாண் போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென இவ்வுலகை விட்டு பிரிந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாக கருதப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் அவருடைய ரசிகர்கள் வரை மிகுந்த வேதனையை உள்ளாக்கியது.

விவேக் சினிமாவை தாண்டி அப்துல்கலாம் ஐயாவின் வழியில் நிறைய நற்செய்திகளை செய்துவந்தார். இயற்கையின் அழிவுக்கு மரம் வெட்டுதல் முக்கிய காரணம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சத்திற்கு அதிகமான மரங்களை வளர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு கோடி மரங்களை வளர்க்க வேண்டும் என தொடர்ந்து அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்குள் மரணம் அவரை அழைத்துக் கொண்டது. இந்நிலையில் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் செல்முருகன். இவர் செல்போன் கடை வைத்திருந்ததால் இவருக்கு செல்முருகன் என பெயர் வந்தது.

விவேக்கின் நெருங்கிய நண்பராகவும், அவரது மேலாளராகவும் செல் முருகன் இருந்துள்ளார். விவேக் மற்றும் செல்முருகன் இவர்களது கூட்டணியில் உருவான காமெடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. படிக்காதவன், சாமி, வேலையில்லா பட்டதாரி, சிங்கம், தாராள பிரபு போன்ற பல படங்களில் விவேக், செல்முருகன் இணைந்து நடித்துள்ளனர்.

விவேக்கின் மறைவுக்குப் பிறகு செல்முருகன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விவேக்கின் பிரிவால் படும் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதுவும் கடந்து போகும் என அனைவரும் விவேக்கின் இறப்பை மறந்து தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால் செல்முருகன் விவேக்கின் மரணத்திற்குப் பிறகு சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி உள்ளார். தற்போது எந்த படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்