இன்று சினிமாவில் இருக்கும் நிறைய நடிகர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் சினிமா துறையை சேர்ந்தவர்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இதோ.

விஜய்
விஜய்யின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் 1992 இல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். இவருடைய இயக்கத்திலேயே 10 படங்கள் வரை நடித்துள்ளார்.

சூர்யா
இயக்குனர் வசந்தின் ஆசை படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு மீண்டும் 1997 இல் நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தவர் சூர்யா. இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் ஒரு அனுபவம் வாய்ந்த முன்னணி நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனது தம்பி கார்த்தியும் வெளிநாட்டில் படித்து விட்டு சினிமாவிற்கு வந்துள்ளார்.

சிம்பு
சிம்பு என்றதுமே உடனே ஞாபகம் வருவது டி.ராஜேந்திரன். இவர் நடிப்பு, பாடல், அடுக்கு மொழி வசனம் என சினிமாவை கலக்கி ஒரு சில படங்களும் எடுத்து தன்னுடைய மகன் சிம்புவை 1984 இல் உறவை காத்த கிளி திரைப்படத்தில் குழந்தை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.

அருண் விஜய்
பிரபல நடிகர் விஜய குமார். நடிப்புக்கென்று தனி இடம் பிடித்த இவர் தனது மகன் அருண் விஜய்யை 1995 இல் முறை மாப்பிள்ளை படம் மூலம் சினிமாவில் இறக்கி விட்டார்.

தனுஷ்
2002 இல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இளம் நடிகனாக முகம் காட்டியவர் தனுஷ். இந்த படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவரின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது குடும்பத்தில் அண்ணன் செல்வராகவனும் இயக்குனர் தான்.

ஜீவா
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய ஆசை ஆசையாய் படத்தின் மூலம் 2003 இல் மகன் ஜீவாவை நடிகராக அடையாளம் காட்டினார். இவரின் இன்னொரு மகன் ஜித்தன் ரமேஷ் சினிமாவில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான எடிட்டர் மோகன் தன் இரு மகன்களுக்கும் சினிமாவை காட்டிவிட்டார். ஒருவர் ஜெயம் ரவி, மற்றொருவர் இயக்குனர் மோகன் ராஜா. ஜெயம் ரவியும் குழந்தையாகவே தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானார்.

விக்ரம் பிரபு
இவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவருடைய அப்பா பிரபுவையே இந்த லிஸ்டில் சேர்த்து விடலாம். அவரும் நடிகர் திலகத்தின் மகன் தானே. கும்கி படம் மூலம் சினிமாவில் ஹிட் ஓப்பனிங் கொடுத்த விக்ரம் பிரபு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

சிபிராஜ்
இவரது முகத்தை பார்த்தாலே கண்டு பிடித்துவிடலாம் இவருடைய தந்தை பிரபல நடிகர் சத்யராஜ் என்று. 2003 இல் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் முகம் காட்டிய சிபி இதுவரை 10 படங்களில் நடித்துள்ளார்.

கெளதம் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்திக் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவருடைய மகன் தான் கெளதம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். 2013 இலிருந்து இதுவரை 5 படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் மட்டுமல்ல இன்னும் இருக்கிறார்கள். இன்னும் புதியதாக சினிமாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் தனது உழைப்பால் மட்டுமே தாக்கு புடிக்க முடியும்..