India | இந்தியா
தல அஜித் பிறந்தநாளில் ரசிகர்கள் போட்ட பிரம்மாண்ட திட்டம்.. ஒரே நேரத்தில் ஒன்றுகூடும் 14 பிரபலங்கள்
அஜித் நடிக்கும் வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட் வராத நிலையில், தற்பொழுது அஜித்தின் பிறந்தநாள் வர இருப்பதால் அதனை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். அதுவும் 14 பெரிய பிரபலங்களுடன் சேர்ந்து கொண்டாடுகின்றனர்.
வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாள் அன்று டிவிட்டரில் டிரெண்டிங் செய்வது பொதுவான விஷயம். ஆனால் இந்த முறை அதுமட்டுமில்லாமல் வேறு ஒரு புதிய திட்டத்தையும் செய்ய உள்ளனர் அஜித் ரசிகர்கள்.
அதாவது காமன் டிபியாக அஜித்தின் ஒரு புகைப்படத்தை அனைவரும் வைக்க உள்ளனர். அந்த காமன் டிபியை 14 நடிகர்கள் வெளியிட இருக்கின்றனர். அவர்கள் ஹன்சிகா, அருண் விஜய், தமன், பிரியா ஆனந்த், ராகுல்தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம், பிரேம்ஜி, ரைசா வில்லன், நிதி அகர்வால், யாஷிகா ஆனந்த், ஆதவ் கண்ணதாசன், ஆர்த்தி, சாந்தனு ஆகியோர் 14ஆம் தேதி சாயங்காலம் 5 மணிக்கு இந்த காமன் டிபியை வெளியிடவுள்ளனர்.
இதனை தீவிர விஜய் ரசிகரான சாந்தனு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். அதே நேரத்தில் அவருடைய பிறந்தநாளன்று வலிமை படத்தின் ஏதாவது ஒரு அப்டேட் வருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்த மாதிரியான ஊரடங்கு சமயத்தில் மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட வேண்டுமா என்று அஜித் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.
மேலும் வலிமை படம் தீபாவளிக்கு என அறிவிக்கப்பட்டு பின்னர் பொங்கலுக்கு வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
