பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் வெள்ளித்திரையில் பலர் நடிகர், நடிகைகளாக கால் பதித்துள்ளனர். அந்தவகையில் இலங்கையிலிருந்து வந்த தர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் தற்போது கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அண்ணன், தங்கையாக இருந்த இருவரும் இப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்துள்ளனர்.
இதில் லாஸ்லியா செய்தி தொகுப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதில் அவருடைய தமிழும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் லாஸ்ஸியா நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் கூகுள் குட்டப்பா வெளியாகியுள்ளது.
கூகுள் குட்டப்பா ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்த வில்லை என்றாலும் ஓரளவு நன்றாக உள்ளது என்ற விமர்சனங்களே வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு காரணம் லாஸ்லியாவின் யோகம், தர்ஷனின் யோகம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசி வருகின்றனர்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடித்துள்ளார். எப்போதும் போல கேஎஸ் ரவிக்குமார் இப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் கூகுள் குட்டப்பா படத்தின் பிரஸ்மீட் நடந்தது.
இதற்கு லாஸ்லியா மிகவும் தாமதமாக வந்துள்ளார். அப்போது ஏன் இவ்வளவு லேட் என அதட்டுவது போல கேஎஸ் ரவிக்குமார் கேட்டுள்ளார். உடனே அவரை சமாளிப்பதற்காக லாஸ்ஸியா கையை கொடுத்த கட்டிப்பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சுற்றி கேமரா இருக்கு உனக்கு தெரியவில்லையா என ரவிக்குமார் கொஞ்சம் கோபத்துடன் திட்டியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த லாஸ்லியா தற்போது மிக ஒல்லியாக மாறியுள்ளார். தற்போது பல படங்களில் லாஸ்லியா கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.