குடிகாரனாக நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும்.. விஜய் பற்றி வெளிப்படையாக சொன்ன பிரபலம்

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் தளபதி 66 திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. வம்சி இயக்கும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் மாஸ்டர் படத்தில் குடிகாரனாக நடித்ததை பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார். தற்போது உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள லோகேஷ் கனகராஜ் அந்த பட புரமோஷன்களில் இப்போது பிஸியாக இருக்கிறார்.

அதில் ஒரு பேட்டியில் அவரிடம் பெரிய ஹீரோக்களுக்கு ஏற்றது போல் உங்கள் கதையை நீங்கள் மாற்றுவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் மாஸ்டர் திரைப்படத்தில் மிகப்பெரிய நடிகரான விஜய் சார் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இமேஜில் இருந்த விஜய் சார் இந்த படத்திற்காக அந்த இமேஜை விட்டு வெளியில் வந்து நடித்தார். ஏனென்றால் கதைக்கு அது மிகவும் தேவையாக இருந்தது. நான் இந்த கதையை எப்போதோ எழுதி விட்டேன். அதன் பிறகுதான் விஜய் சார் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.

அதற்காக நான் அந்தக் கதையை அவருக்கு ஏற்றாற்போல் மாற்றவில்லை. விஜய் சாரும் என்னை கட்டாய படுத்தவில்லை. அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும் என்று லோகேஷ் கனகராஜ், விஜய்யை பாராட்டி பேசினார்.

அதே போன்று தற்போது இயக்கி இருக்கும் விக்ரம் திரைப்படத்திலும் அவர் நடிகர்களுக்காக கதையில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை. தன் கதையை அப்படியே எடுத்திருப்பதாகவும், கமல் சார் அதற்கு உண்டான சுதந்திரத்தை எனக்கு கொடுத்ததால்தான் படம் நன்றாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்