Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யாவுக்கு இனிதான் ஏழரை ஆரம்பம்.. எச்சரிக்கும் பிரபலம்
அக்டோபர் 30-ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போற்று அமேசான் தளத்தில் வெளியாக இருப்பது தான் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நீண்ட காலமாக ஒரு வெற்றி கிடைக்காமல் தடுமாறி வரும் சூர்யாவுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வசூலை குவித்து அவரது மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் இப்படி செய்து விட்டார்.
பொன்மகள் வந்தாள் படம் வெளியானபோதே சூரரைப்போற்று படத்தின் வியாபாரம் முடிக்கப்பட்டது. ஆனால் கடைசிவரை ரசிகர்களை தியேட்டரில் வெளியிடுகிறோம் என சூர்யா ஏமாற்றி வந்ததாக பிரபல தயாரிப்பாளரும் தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கண்டிப்பாக சூரரைப்போற்று படம் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் அனைவருக்குமே நல்ல கலெக்ஷன் பெற்றுக் கொடுத்துருக்கும். இருந்தாலும் சூர்யா அப்படிப் பண்ணியது சரி இல்லை என்கிறார்கள்.
பொன்மகள் வந்தாள் படம் முதல் முதலில் OTT தளத்தில் வெளியான போது இனிமேல் சூர்யா மற்றும் அவரது குடும்ப திரைப்படங்கள் எதுவுமே தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இருந்தாலும் சூரரைப்போற்று நல்ல படம் என்பதால் அந்தக் கொள்கைகளில் இருந்து பின் வாங்கிக் கொள்ளலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென சூரரைப்போற்று படமும் OTT-க்கு சென்றதால் தியேட்டர் ஓனர்கள் சூர்யாவின் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.
இனிமேல் நீங்கள் எவ்வளவு பெரிய படம் நடித்தாலும் உங்களது படம் தியேட்டரில் வெளியாகாது என அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளனர்.
காலம் மாறினால் எதுவும் மாறலாம் என்பதை போல நாளைக்கே சூர்யாவின் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்கள் மாறிவிடுவார்கள் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
