fbpx
Connect with us

Cinemapettai

அருமையான படம் “விழித்திரு”. சொல்கிறார்கள் திருமுருகன் காந்தி, பா.ரஞ்சித், வசந்த பாலன்.

News | செய்திகள்

அருமையான படம் “விழித்திரு”. சொல்கிறார்கள் திருமுருகன் காந்தி, பா.ரஞ்சித், வசந்த பாலன்.

2010ல் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். மசாலா கலந்த படங்களை இயக்குவதை தவிர்த்து, சமூக அக்கறை உள்ள படங்களை எடுப்பது தான் இவர் கொள்கை. இவரே கதை எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் விழித்திரு. இப்படம் முதலில் ரிலீஸ் ஆனது என்னவோ மிக குறைந்த திரை அரங்குகளில் தான். பின்னர் மக்கள் ஆதரவினால் வெற்றி நடை போடுகிறது.

பல தடைகளை தகர்த்து, ரிலீஸ் ஆகியுள்ள இப்படத்தை பற்றி  செலிபிரிட்டி சிலரின் கருத்தை பார்ப்போம்…

இயக்குனர் வசந்தபாலன்

Vasantha Balan

விழித்திரு திரைப்படம் பார்த்தேன். நான்கு கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சிட்டு திரைக்கதை நெய்வது உண்மையில் மிக மிக கடினமான வேலை.

அதை இயக்குநர் மீரா கதிரவன் மிக அருமையாக செய்துள்ளார்.ஒரு இரவில் நடக்கிற நான்கு கதைகள்.இரவு படப்பிடிப்பு என்பது மிக கடினமான வேலை.
அதை திறமையாக கையாண்டுள்ளனர் மீராவும் அவருக்கு துணை நின்ற ஒளிப்பதிவாளர்களும்.

இன்று ஒரு திரைப்படம் திரைக்கு வர எத்தனை கடினமான தடைகளை தாண்ட வேண்டுமென்பதை இயக்குநர் மீராவை கேட்டால் விஷ்ணுபுரம் அளவிற்கு ஒரு 1000 பக்க நாவல் எழுதி தள்ளுவார். அது தயாரிப்பாளரான ஒரு இயக்குநரின் ஒப்புதல் வாக்குமூலம் என்று தலைப்பில் வெளியானால் கூட ஆச்சரியப்பட தேவையில்லை.
இத்தனையையும் தாங்கிய தாண்டிய மனஉறுதிக்கு வாழ்த்துக்கள் மீரா.

 

தோழர் திருமுருகன் காந்தி

புழல் சிறையில் நான் சந்தித்த அரசியல் சாராத நபர்களில் மீராகதிரவனும் ஒருவர். நான் எதிர்பார்த்திராத சந்திப்பு அது. ஒரு திரைப்பட இயக்குனர், தனது படைப்பினை வெளிக்கொண்டு வருவதற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒருவர், தன்னுடைய வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு எங்களை சிறையில் சந்திக்க ஓரிரு மணி நேரம் காத்திருந்து சிறைக்குள் வந்து பேசி, ஆதரவளித்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது். சிறைக்கு வந்து ஆதரவளிக்க எவ்வித தயக்கமும் இல்லாமல், அச்சமின்றி ஆதரவளித்த இனிய தோழர் அவர்.

நாங்கள் சிறையிலிருந்து மீண்டதும், சிறை வாசலில் காத்திருந்து எங்களை வரவேற்றவர். மக்கள் படைப்பாளியின் படைப்பு ஒன்று வெளியானதில் எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியும், பெருமையும்.ஒரு படைப்பாளியின் ஆதரவு என்பது
எந்த ஒரு வலிய அரசையும் எதிர்கொள்ளும் வலிமையை நமக்கு அளிக்கும் வல்லமை கொண்டது.

இயக்குனர், தோழர்.மீரா கதிரவன்  அற்புதமான படைப்பாளி. சமூகப் பார்வையும், மாற்று அரசியல் சிந்தனையும் கொண்ட எளிய தோழர். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு ஒரு திரைப்படத்தினை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். தோழர்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறார்கள்.

தீர்க்கமான சமூக பார்வையை, அனைவருக்கும் சென்று சேரும்படியான ஒரு படைப்பாக அவரது ‘விழித்திரு’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. சொல்ல வந்த விடயத்தினை அழகாகவும், நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார்.

இப்படத்தினை உருவாக்கிய பின்னர், அதை வெளியிட அவர் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. வணிக சந்தையாகவும், பெரும் தயாரிப்பாளர்கள்-நடிகர்களுக்கு மட்டுமேயான இடமாகவும் திரைத்துறை மாற்றப்பட்டிருக்கிறது என்பதை எளிதில் புரியவைக்கும் படியான நிகழ்வுகள் அவை. இவற்றையெல்லாம் சாமானியனால், எளிய படைப்பாளியால் கடக்க இயலாத அளவிற்கு மிருகத்தனமாய் எழுந்து நிற்பவை. இந்த இன்னல்களைக் கடந்து இப்படத்தினை திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். எனக்கு தெரிந்து பலமுறை இப்பட வெளியீடு தள்ளிபோடப்பட்டு , பெரும் பொருட்செலவினை சந்தித்திருக்கிறார்கள் தோழர்கள்.

ஸ்டார் நடிகர்கள், ஸ்டார் தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கான இடமாக மட்டுமே இப்படைப்புலகம் மாற்றப்படாமல் தடுக்க, மீரா கதிரவனைப் போன்ற நம் தோழர்களை, மக்களை நேசிக்கும் படைப்பாளிகளை, முற்போக்கு சிந்தனையாளர்களை வலுவானவர்களாக மாற்றவேண்டிய அவசியம் நமக்கு உண்டு.

அவசியம் நீங்கள் பார்க்கவேண்டிய திரைப்படம் ‘விழித்திரு’. வாய்ப்பினை ஏற்படுத்தி ஆதரவளியுங்கள். நமக்கான தோழர்களை நாம் ஆதரித்து தோளோடு தோள் நிற்போம்.

பா. ரஞ்சித்

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top