கடின உழைப்பாலும், தன்னுடைய நடிப்புத் திறமையாலும் சினிமாவில் தனக்கென்று முத்திரை பதித்து கொண்டவர் தல அஜித். இவர் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 46வது பிறந்தநாளை முன்னிட்டு டுவிட்டரில் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, தல ரசிகர்களும் தங்களது பங்கிற்கு அவரது புகைப்படத்துடன் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தற்போது செர்பியாவில் விவேகம் படத்தின் படப்பிடிப்பில் தல பிஸியாக இருப்பதால், அவரை காண முடியாத வருத்தத்தில் தல ரசிகர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தல அஜித் பற்றி ரஜினி, ராஜமௌலி, பிரபாஸ், ராணா ஆகியோர் உள்பட கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அஜித்தின் வெளிப்படையான தன்மை எனக்கு பிடிக்கும் – ரஜினிகாந்த்

அஜித் ஒரு அற்புதமான மனிதர், நடிகர் – எஸ்.எஸ்.ராஜமௌலி.

அதிகம் படித்தவை:  முன்னேற்றத்தில் முந்திக்கொண்டு வரும் விஜய்.! அஜித் எந்த இடம் தெரியுமா!

என்னிடம் யாராவது வந்து கேட்டால், நான் கண்டிப்பாக அஜித்துடன் இணைந்து நடிப்பேன் – பவன் கல்யாண்

நான் அஜித் மற்றும் அவரது இரக்க குணத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் – பிரபாஸ்

நான் ஒரு நடிகராக இருந்த போதிலும் தல அஜித்தின் ரசிகனாக இருப்பதற்கு பெருமை படுகிறேன் – சிம்பு

ஒரு மனிதனாகவும், நடிகனாகவும் தல அஜித்தை நான் பாராட்டுகிறேன் – தனுஷ்

அஜித் என்னுடைய பேவரைட் ஹீரோ – துல்கர் சல்மான்

அஜித்தின் வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – ராணா டகுபதி

தல அஜித்தின் ஒவ்வொரு படத்தின் டீசர் மற்றும் டிரைலரை பார்க்கும் போது எப்படியிருக்குமோ அதே போலத்தான் அவரை நேரில் சந்திக்கும் போது என்னுடைய மன நிலை இருந்தது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். அவருடன் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் – சிவகார்த்திகேயன்.

அதிகம் படித்தவை:  தெறி,கபாலி படங்களுக்கு சிக்கல்

அஜித் சார் ஒரு அற்புதமான நடிகர் – காஜல் அகர்வால்

தல அஜித்தின் மிகப்பெரிய ரசிகை – மனீஷா யாதவ்

அஜித் மிகப்பெரிய மனிதர். வாழ்க்கையில் நிறைய சாதனை படைத்திருக்கிறார் – ராய் லட்சுமி

அஜித் ஒரு எளிய மனிதர். இந்த பூமியில் மனத்தாழ்மையுடன் இருக்கிறார் – சரத்குமார்

அஜித்துடன் இணைந்து நடிப்பது என்பது மறக்கமுடியாத ஒன்று. எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது
பெருமையாக இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்

அஜித் தீவிரமாக செயல்படக்கூடியவர் – லிங்குசாமி

அஜித் முற்றிலும் பெரிய மனிதர் – தமன்னா

அஜித் ஒரு பெரிய மனிதர் – அர்ஜூன்