Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-kumar-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் இதை கவனித்து கொண்டுதான் இருக்கிறார்.. தல பட நடிகை வெளியிட்ட ரகசிய தகவல்

கவன் படத்தில் ரசிகர்களிடையே மிகவும் திட்டு வாங்கிய கதாபாத்திரம் என்றால் டிவி சேனலில் வேலை செய்யும் ஆண்டி கதாபாத்திரம் தான். அதில் நடித்தவர் பிரியதர்ஷினி.

அதன்பிறகு தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை எனும் படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கைவசம் பல படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தல அஜித் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத செய்தியை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். இதுதான் தற்போது தல ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தல அஜித் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் ஈடுபாடு இல்லாதவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் அவருக்கு அக்கவுண்ட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாராம் தல அஜித். தன்னைப் பற்றிய தவறான செய்திகள் வரும்போது அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித்.

இந்த மாதிரி ரசிகர்கள் தவறாக நடந்து கொண்டதால்தான் ரசிகர் மன்றங்களை கலைத்தார் எனவும் தெரிவித்துள்ளார். எனவே ரசிகர்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார்.

Continue Reading
To Top