வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கங்குவா தோல்விக்கு இதுதான் காரணம்.. சினிமாவையும், அரசியலையும் கோர்த்துவிட்ட பிரபலம்

Suriya: சமீபத்தில் சூர்யாவின் பிரம்மாண்ட பட்ஜெட் படமான கங்குவா படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. சிறுத்தை சிவா இந்த படத்தை பல வருடங்களாக எடுத்து வந்த நிலையில் ஞானவேல் ராஜா பல கோடி செலவு செய்து இந்த படத்தை தயாரித்திருந்தார்.

கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்தது. ஆனால் முதல் நாளில் இருந்தே படத்திற்கு மோசமான விமர்சனங்கள் வந்ததால் தியேட்டரில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லை. அதோடு போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் கங்குவா திணறி வருகிறது.

இந்த சூழலில் தனஜெயன் கங்குவா படத்திற்கான நெகட்டிவ் விமர்சனத்தின் காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது சூர்யாவின் வளர்ச்சி பிடிக்காததால் கங்குவாவை இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்கள் வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனத்தை பரப்பி இருக்கிறார்கள்.

கங்குவா தோல்விக்கான காரணத்தை கூறிய பிரபலம்

அவர்கள் மட்டுமல்லாமல் சூர்யாவின் அரசியல் கருத்துக்கள் பிடிக்காத இரண்டு பெரிய கட்சியை சேர்ந்தவர்களும் திட்டமிட்டு கங்குவா படத்தை தோற்கடித்துள்ளதாக தனஜெயன் கூறியிருக்கிறார். அதாவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் இவ்வாறு சொல்லி உள்ளதாக மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே ஜோதிகா கங்குவா படத்திற்கு ஆதரவாக பேசிய நிலையில் சர்ச்சை கிளம்பி இருந்தது. அதாவது படத்தின் மேக்கிங் மற்றும் இசை மோசமாக இருந்ததால் தான் கங்குவா படம் ரசிகர்களை ஈர்க்க தவறியதாக கருத்துக்கள் வந்தது.

ஆனால் இப்போது நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல பலரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருவதாக விமர்சனங்கள் வருகிறது. அடுத்ததாக சூர்யா ஒரு நல்ல ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Trending News