இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மட்டுந்தான் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை தலா மூன்று முறை வென்றிருந்தன. ஆனால், நியூசிலாந்தில் பே ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை தன் வசமாகியது இந்திய அணி.

u 19 wc

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியின் கீழ் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிடம் கோப்பையை நழுவவிட்டது. கடந்த முறை செய்த தவறுகளை சரி செய்த டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இந்த முறை கோப்பை வென்று சரித்திரம் படைத்தது. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

rahul dravid

இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி அணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இறுதி போட்டி இரண்டையும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து தான் விளையாடியது இந்திய அணி.

shubam gill

வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் கேஷ் பரிசு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் கோச்சி ராகுல் ட்ராவிடுக்கு 50 லட்சமும் பிற ஸ்டாப் அவர்களுக்கு 20 லட்சமும் வழங்க உள்ளது.

u 19 wc team india

கோப்பையை வென்ற இந்திய அணியை பலரையும் பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு சில உங்கள் பார்வைக்கு ..

prithvi shaw

#TeamIndia #U19

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில், 2 வீரர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்கள்.

ஆஸ்திரேலிய அணி கேப்டனாக ஜேசன் சங்கா மற்றும் பரம் உப்பல் இருவரும் இந்திய (பஞ்சாப் மாநிலம் ) வம்சாவளியை சேர்ந்தவர்கள்.

இவர்களை தவிர இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.