Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் குழந்தைகளுக்காக நடிபதையே பல வருடங்கள் ஒதுக்கி வைத்த நடிகைகள்!
ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்வில் குடும்பம் மற்றும் குழந்தைகளை விட வேறு எதுவும் முக்கியமில்லை. நடிகையாக இருந்தாலும், தனது தொழில் வாழ்க்கை விட குழந்தைக்கே முக்கியத்துவம் கொடுப்பர்.
அந்த வகையில் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த பல நடிகைகள் திருமணத்திற்கு பின் கூட நடித்தனர். ஆனால் குழந்தை பிறந்த பின், கஷ்டப்பட்டு நுழைந்த திரையுலகிற்கே குட்-பை சொல்லிவிட்டு சென்றனர்.
அன்னையர் தின ஸ்பெஷலாக, தன் குழந்தைகளுக்காக பாலிவுட்டையே விட்டு சென்ற சில பாலிவுட் நடிகைகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். அதைப் பார்ப்போமா…!
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி கொடிக்கட்டி பறந்து கொண்டிருக்கும் போது திரைப்பட தயாரிப்பாளரான போனிக் கபூரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே தன் அழகிய தேவதையான ஜானவியைப் பெற்றெடுத்தார். குழந்தைப் பிறந்த பின் ஸ்ரீதேவி பல வருடங்களாக திரையுலகில் காலடி பதிக்கவே இல்லை. பின் 6 வருடங்கள் கழித்து மெதுவாக திரையுலகில் நுழைய ஆரம்பித்தார்.

அம்ரிதா சிங்
நடிகை அம்ரிதா சிங் 1991 ஆம் ஆண்டு சைஃப் அலி கானை திருமணம் செய்து கொண்டார். பின் இரு குழந்தைகளுக்கு தாயான பின் குழந்தைகளைப் பராமரிக்க திரையுலகை விட்டு விலகி சென்று விட்டார். 13 வருடங்களுக்குப் பின் இந்த தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டன. பின் 2002 இல் மீண்டும் அம்ரிதா திரையுலகில் நுழைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டே, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

லாரா தத்தா
முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகியான லாரா தத்தா, இந்திய டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து, சயிரா என்னும் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின், லாரா தத்தாவை வெள்ளித்திரையில் காணவே முடியவில்லை. ஆனால் விரைவில் திரையுலகில் நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாதுரி தீட்சித்
நடிகை மாதுரி டாக்டரான ஸ்ரீராம் அவர்களை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, அமெரிக்கா பறந்து சென்று விட்டார். பின் தன் குடும்பத்திற்காகவே பாலிவுட்டை விட்டு சென்று இரு குழந்கைளுக்கு தாயானார். சில வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியா திரும்பி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கஜோல்
நடிகை கஜோல் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், திரையுலகில் இருந்து வெளியேற முடிவெடுத்து, இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தார். பின் பல வருடங்கள் கழித்து, மீண்டும் பாலிவுட்டில் நுழைந்தார். இருப்பினும் தன் குழந்தைகளுடன் போதிய நேரத்தை செலவழிப்பதற்கு ஏற்றவாறு, கதாப்பாத்திரங்களை பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கரீஷ்மா கபூர்
2003 ஆம் ஆண்டு நடிகை கரீஷ்மா கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரான சஞ்சய் கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னரும், திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வந்தார். பின் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பின், திரையுலகை விட்டு சில வருடங்கள் விலகி இருந்தார். இந்த இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார். பின் தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 2012 ஆம் ஆண்டு மீண்டும் திரையுலகில் நுழைந்துவிட்டார்.
அம்ரிதா அரோரா லடக்
அம்ரிதா 2009 ஆம் ஆண்டு தொழிலதிபரான ஷாகீல் லடக் என்பவரை திருமணம் செய்து, திரையுலகை விட்டு சென்றுவிட்டார். இவர் நடித்த கடைசி திரைப்படம் 2009 இல் வெளிவந்தது. இதற்கு பின் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

சோனாலி பிந்த்ரே
நடிகை சோனாலி பிந்த்ரே இயக்குனரான கோல்டி பேல் என்பவரை திருமணம் செய்து, ரன்வீர் என்னும் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இவருக்கு திரையுலகில் மீண்டும் நடிக்க விருப்பமில்லை மற்றும் மீண்டும் வர வேண்டும் என்ற ஆசையும் இல்லையாம். இவருக்கு நடிகையாக இருப்பதை விட, முழு நேர அன்னையாக இருக்கவே விரும்புகிறராம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
