Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ்பிபி-ஐ பார்க்க வராத அஜித்தை வெளுத்து வாங்கிய பிரபலம்.. உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்

எஸ் பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் இறந்ததைவிட அஜித் ஏன் அவரை பார்க்க வரவில்லை என்ற சர்ச்சை தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
தல அஜித்துக்கு சினிமா பட வாய்ப்புகளை முதன்முதலில் வாங்கிக் கொடுத்தவர் எஸ் பி பாலசுப்பிரமணியம். அஜித் அதை கூறவில்லை என்றாலும் பல மேடைகளில் எஸ்பிபி கூறியுள்ளார்.
அதன் பிறகு அஜித் படங்களில் நிறைய பாடல்களையும் பாடிக் கொடுத்தார் எஸ்பிபி. அதுமட்டுமல்லாமல் எஸ் பி பி யின் மகன் சரண் மற்றும் அஜித் ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் பயின்றவர்கள்.
அஜித்துக்கு பலவகையில் எஸ்பிபி உதவியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்படி இருக்கும்போது எஸ்பிபி உடல் நிலை சரியாக இல்லாத நிலையிலும், இறந்து விட்ட போதும் அஜித் ஏன் வந்து பார்க்கவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ட்விட்டரில் சுமந்த் ராமன் என்ற பிரபலம், எஸ்பிபி-யால் அதிகம் பயனடைந்த அஜித் வந்து பார்க்கவில்லை. ஆனால் ஒரு படத்தில் அவருடன் நடித்ததற்காக நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் தளபதி விஜய் எனப் புகழ்ந்துள்ளார்.
எஸ் பி பி-யால் நிறைய பலன்களை அடைந்த அஜித் எஸ்பிபியை பார்க்க வராதது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அஜித் ஏன் வரவில்லை என்ற காரணம் தற்போது வரை வெளிவராததால் அவரது ரசிகர்களே ஆதங்கத்தில் உள்ளனர்.

sumanth-ajith-tweet
இப்படி ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசும் அளவுக்கு அஜித் நடந்து கொண்டார் என்று தல ரசிகர்கள் அவர்மீது ஆதங்கத்தில் இருந்தாலும், அஜீத்தை விட்டுக் கொடுக்காமல் பிரபலங்களிடம் சண்டை போட்டு வருகின்றனர்.
