Connect with us
Cinemapettai

Cinemapettai

SA-chandraskhar-hit-movies-cinemapettau

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பாவிடம் பெல்டிலேயே அடி வாங்கிய விஜய்..பரபரப்பான பேட்டியால் கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவருக்கென்றே தமிழகத்தில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இவர் அரசியலில் வருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் தனது மகன் அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆணித்தரமாக கூறியதை தளபதி விஜய் பகிரங்கமாக மறுத்துவிட்டார். 

அதன்பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட சலசலப்பு சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் பிரபல எழுத்தாளரான கலைமணி அளித்த பேட்டியின் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதில் “தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருருக்கும் இன்றல்ல நீண்ட காலமாகவே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. 

ஏனென்றால் தளபதி விஜய்க்கு படிப்பைவிட நடிப்பில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதன்பின் எஸ்ஏ சந்திரசேகரன், பிடிவாதமாக விஜய் நடிக்க விரும்பியதால் 2 வீட்டை விற்று தான் விஜய்யை ஹீரோவாக வைத்து 2 படம் எடுத்தார். 

ஆனால் அந்தப் படமும் படு தோல்வியடைந்தது. என்ன நடுரோட்டில் நிற்க வச்சுட்டான். அதுக்கப்புறம் நான் விஜய நடிக்காத நடிக்காதனு பெல்டால அடிச்சாலும் திருந்த மாற்றான்  என்று அழுகாத குறையாக புலம்பினார் எஸ்ஏ சந்திரசேகரன்” என பிரபல எழுத்தாளர் கலைமணி பேட்டியளித்துள்ளார்.

எனவே தளபதி விஜய் பெல்டால் அடி வாங்கியதை கேள்விப்பட்ட அவருடைய ரசிகர்கள் கடும் கோபத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் வடிக்கின்றனர்.

Continue Reading
To Top