ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.. மகள் பிக்பாஸ், அப்பா சீரியலா! ரொம்ப பிரமாதம்

80களில் வெள்ளித்திரையை கலக்கிக் கொண்டிருந்த பழம்பெரும் நடிகர் நடிகைகள், அதன்பிறகு சின்னத்திரையிலும் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சுமார் 400 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்த தென்னிந்திய நடிகரான விஜயகுமார் தற்போது ஜீ தமிழ் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே விஜயகுமார் சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான தங்கம், வம்சம், நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து சின்னத் திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். தற்போது மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ என்ற சீரியலில் நடிகர் விஜயகுமார் நடிக்கிறார்.

இந்த சீரியலில் முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இதன் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. எனவே அதில் விஜயகுமார் நடிக்க இருப்பது சின்னத்திரை ரசிகர்களிடையே சந்தோஷத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் விஜயகுமார் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சீரியலில் நடிக்கும் நடிகர்களுடன் சேர்ந்து இருக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக விஜயகுமார் நாட்டாமை படத்தில் தன்னுடைய கணீர் குரலினால் தீர்ப்பு வழங்கியது போல இந்த சீரியலிலும் நாட்டாமை போன்ற பஞ்சாயத்து தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

vijayakumar-cinemapettai
vijayakumar-cinemapettai

ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி சீரியலில் கெஸ்ட் ரோலில் விஜயகுமார் நடித்திருக்கும் எபிசோட் இனி வரும் நாட்களில் ஒளிபரப்பாகும். அத்துடன் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் காரசாரமான விவாதத்திலும் சண்டை சச்சரவு உடன் பூந்தல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஒருபுறம் மகள் பிக்பாஸில் கலக்கி கொண்டிருப்பது போல், மறுபுறம் அப்பா சீரியலில் நடிக்க ஆரம்பித்துவிட்டாரா என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News