திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

இன்னும் இந்த செவுரு எத்தனை பேரை காவு வாங்க போகுதோ.. Divorce லிஸ்ட் பெருசா போகுதே

விவாகரத்து என்பது ஒருவரின் தனிப்பட்ட முடிவு என்றாலும் கூட, நாளுக்கு நாள் அது அதிகரித்து வருவது உறவுகள் மீதான நம்பிக்கையை துண்டு துண்டாக உடைப்பது போல தான் இருக்கிறது. குறிப்பாக நாம் பார்த்து ரசித்து, வந்த சினிமா பிரபலங்கள், அவர்கள் நடிப்பில் வெளியான காதல் படங்களை உணர்ந்த நம்மளால் எளிதில் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் விவகாரத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அப்படி கடந்த சில வருடங்களில் முக்கிய நட்சத்திரங்களுக்கு நடந்த விவாகரத்து காதல் மீது இருக்கும் நம்பிக்கையை உடைக்கும் விதமாக உள்ளது. திரை துறையில் இருப்பவர்கள் என்றாலே விவாகரத்து confirm என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் நடந்த விவகாரத்தை பார்க்கும்போது, “என்ன லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது..” என்றும் தோன்றுகிறது…

கோலிவுட்டில் அதிகரிக்கும் விவாகரத்து

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அஸ்வின் குமார்: சௌந்தர்யா ரஜினிகாந்த முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த நேரத்தில் தான் இது நடந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தொழிலதிபர் அஸ்வின் குமாரை திருமணம் செய்து நல்லபடியாக வாழ்ந்துகொண்டிருந்தபோது திடீரென்று இவர்களுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்த நிலையில் 6 வருடம் கழித்து இவர்கள் விவாகரத்து பெற்றனர். இவருக்கு விவாகரத்து ஆனபோதும் தனுஷ் தான் காரணம் என்று பேசப்பட்டது.

பிரபுதேவா மற்றும் ரம்லத்: நடிகை நயன்தாராவுடனான காதல் ஏற்பட்ட பிறகு, பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் அதிகமான பிரச்சனையானது. ஊடங்களில் வெளியான செய்திகள் எல்லாமே உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், ரம்லத்திடமிருந்து விவாகரத்து பெற்று நயன்தாராவை திருமணம் செய்தார் பிரபு தேவா. இவருக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், இது மிகப்பெரிய பேசுபொருளாகவும் மாறியது. இதை தொடர்ந்து பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறினார். ஆனால் குழந்தைகளை பார்க்கமுடியாது என்று நயன்தாரா கூறியதால் இவர்களும் பிரிந்தனர்.

சித்தார்த் மற்றும் மேகனா: சித்தார்த்துக்கு ஒரு திருமணம் ஆனதும் விவாகரத்து ஆனதும் பலருக்கு தெரியாத ஒரு விஷயமாக தான் இருக்கிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவாகவே சித்தார்த் வெளியில் தெரிவிக்கமாட்டார். அப்படி தான் இந்த திருமணம். இது ஒரு காதல் திருமணமாக இருந்தபோதிலும், தொடர்ந்து சித்தார்த் பல சர்ச்சைகளில் சிக்கியதை தொடர்ந்து, இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து நடந்ததாக கூறப்படுகிறது’

கார்த்திக் குமார் மற்றும் சுசித்ரா: பாடகி சுசித்ராவும் ஸ்டாண்ட் அப் காமெடியன் கார்த்திக் குமாரும் திருமணமான சில காலங்கள் நல்லபடியாக வாழ்ந்து வந்தனர். இதை தொடர்ந்து சுசி லீக்ஸ் வெளியான பிறகு, இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த சுசி லீக்ஸ் இன்றளவும் ஒரு பஞ்சாயத்தாகவே உள்ளது.

சமந்தா நாகசைதன்யா: ட்ரீம் couples, made for each other couples என்று மக்களால் கொண்டாடப்பட்ட சமந்தா நாகசைதன்யா ஜோடி பிரிந்தது, இன்றளவும் ரசிகர்களுக்கு ஒரு ஆறாத வடுவாகவே உள்ளது. மேலும் சமீபத்தில், நாகசைதன்ய சோபிதாவை திருமணம் செய்யவிருப்பது, சமந்தா ரசிகர்களுக்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இவர்கள் கடந்த வருடம் விவாகரத்து செய்தி அறிவித்ததிலிருந்து, இன்றளவும் கோர்ட்டில் ஆஜராகாமல் இழுத்தடித்து வருகிறார்கள். இது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் விவாகரத்து முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று தெளிவாக கூறி இருக்கிறார்கள். இவர்களுக்கு விவாகரத்து ஆனைமுதல் கோலிவுட்டில் பல ஜோடி பிரிந்தது.. அனைத்துக்கும் காரணம் தனுஷ் தான் என்று ஒரே போடாக போட்டுவிட்டார்கள் நெட்டிசன்கள்..

ஜெயம் ரவி ஆர்த்தி: ஒரு விவாகரத்து இந்த அளவுக்கு சர்ச்சையாகுமா, என்று நமக்கு ஆச்சரியத்தை கொடுத்த ஒரு விவாகரத்து என்றால் அது ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து தான். இதில் ஆர்த்திக்கு சம்மதம் இல்லை என்றாலும் கூட, ஜெயம் ரவி விவாகரத்து முடிவில் தெளிவாக இருக்கிறார்.

அமலா பால் மற்றும் ஏ.எல் விஜய்: கோலிவுட்டில் முதலில் பிரபல ஜோடி பிரிந்தது என்றால் அது இந்த ஜோடி தான். அந்த நேரத்தில் அமலா பால் தனுஷுடன் இணைந்து வெள்ளை இல்லா பட்டதாரி படத்தில் படித்துக்கொண்டிருந்தார். இதை தொடர்ந்து, இவர்களுக்கு நடந்த விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என்ற பேச்சு பரவியது.

- Advertisement -

Trending News