தொடர் தோல்வியால் வந்த விபரீதம்.. மணிரத்தினம் வாழ்க்கையில் இடியாய் விழுந்த தற்கொலை சம்பவம்

மணிரத்னம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான். இந்திய சினிமாவை அடுத்த இடத்திற்கு எடுத்துச் சென்றவர் என்று கூட கூறலாம்.
இவரைப் பார்த்து சினிமா எடுக்க வேண்டும் என்று ஆர்வத்தில் சென்னை வந்தவர்கள் பல பேர்.

மனிதரத்தத்தின் அண்ணன் ஜீ வி வெங்கடேஸ்வரன், இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த காலத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர். மணிரத்தினம் இயக்கக்கூடிய படங்கள் அனைத்தும் ஜிவி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கும்.

ஜிவி பிலிம்ஸ் என்பது மணிரத்தினத்தின் அண்ணன் வெங்கடேஸ்வரன் நடத்திவந்த நிறுவனம். ஆரம்பத்தில் இவர்கள் அஞ்சலி, மௌனராகம், தளபதி, நாயகன் என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தனர். படங்கள் அனைத்தும் நல்ல வசூலை பெற்றுத் தந்தது .

ஆனால் ஆணைக்கும் அடி சறுக்கும் என்பது போல ஜி வி பிலிம்ஸ்க்கு சில துரதிர்ஷ்டமான சம்பவங்கள் நடைபெற்றது. ஜி வி வெங்கடேஸ்வரன் ஒரு காலத்தில் மணிரத்னத்தை விட்டு பிரிந்து சென்று படங்களை தயாரிக்க ஆரம்பித்தார்.

அப்படி அவரால் சில படங்கள் தயாரிக்கப்பட்டது தான் தமிழன், ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க, மே மாதம், நீங்க நல்லா இருக்கணும், சொக்கத்தங்கம் போன்ற படங்கள். இந்தப் படங்கள் அனைத்தும் இவருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

நஷ்டத்தை ஈடு கொடுக்க முடியாமல் அதற்கு இணையாக தனது வாழ்க்கையையே முடித்துவிட்டார் ஜிவி வெங்கடேஸ்வரன். தொடர்ந்து எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்காத நிலையில் இவர் 2003 ஆம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி அவரது தம்பி மணிரத்னத்தை மட்டுமல்லாமல் மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்