புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

2024ல் தேசிய விருது பெற்ற பிரபலங்கள்.. அள்ளிக் குவித்த பொன்னியின் செல்வன்

70th National Film Awards: 70ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. அதாவது 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. தேசிய விருதை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.

இதில் ரிஷப் செட்டி காந்தாரா படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றார். தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் பெற்றுள்ளார். தனுசுடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்தது.

தமிழில் பொன்னியின் செல்வன் படம் தான் கிட்டத்தட்ட நான்கு தேசிய விருதுகளை குவித்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் கல்கியின் நாவலை கொண்டு மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டிருந்தது.

70 ஆவது தேசிய விருது விழாவில் விருது வாங்கிய பிரபலங்கள்

இதனால் சிறந்த தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் படம் பெற்றது. இதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் லைக்கா சுபாஸ்கருனுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அதேபோல் இந்த படத்தில் இசையமைப்பதற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற விருதினை ஏ ஆர் ரகுமான் பெற்றார். மேலும் சிறந்த இசை வடிவமைப்புகள் என்ற விருது அடிப்படையில் ஆனந்த கிருஷ்ணமூர்த்தி தேசிய விருது கொடுக்கப்பட்டது.

பொன்னியின் செல்வன் படத்தில் சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதற்காக ரவிவர்மனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவ்வாறு 70வது தேசிய விருது விழாவில் பொன்னியின் செல்வன் படம் விருதுகளை அள்ளி குவித்து இருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பெயராகும்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்

- Advertisement -

Trending News