50 வயது தாண்டியும் கல்யாணம் ஆகாத நடிகர்கள்.. ஸ்ட்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான்

சினிமா பிரபலங்கள் தங்களது திருமண வயதை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார்கள். இவ்வாறு போகையில் சில சமயங்களில் வயது வரம்பைத் தாண்டி விடுகிறது. அவ்வாறு 50 வயதை கடந்தும் திருமணமாகாமல் சிலர் சிங்களாகவே சுற்றி வருகின்றனர். அவர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

எஸ் ஜே சூர்யா : இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் நடிகர் எஸ்ஜே சூர்யா. இவர் தற்போது நிறைய படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார். இந்நிலையில் 54 வயதை கடந்தும் எஸ் ஜே சூர்யா சிங்கிளாகவே உள்ளார். தற்போது இவருக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

தபு : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தபு. இவருக்கு கிட்டதட்ட 51 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

ராகுல் போஸ் : பெரும்பாலும் ஹிந்தி படங்களில் நடிப்பவர் ராகுல் போஸ். இவர் எழுத்தாளர், பின்னணி பாடகர் என பல திறமைகளை கொண்டுள்ளார். மேலும் விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருக்கு 57 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக உள்ளார்.

rahul-bose
rahul-bose

சல்மான் கான் : பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சல்மான்கான். இவருக்கு பாலிவுட்டை தாண்டி மற்ற மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இவருக்கு 56 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கரண் ஜோகர் : பாலிவுட்டில் முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர் கரன் ஜோகர். இவர் தனது படங்களுக்காக பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார். இவருக்கு தற்போது 50 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

coffee-with-karan
coffee-with-karan

Next Story

- Advertisement -