கடந்த சில வாரங்களாக தமிழ் நாட்டையே உலுக்கும் சம்பவம் என்றால் அது பிஎஸ்பிபி பள்ளி உட்பட சென்னையில் உள்ள பல பெரிய பள்ளியில் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளிடம் ஆசிரியர்கள் சில்மிஷம் செய்வது தான்.
அப்படித்தான் ராஜகோபாலன் என்ற ஆசிரியரை நோண்டி நொங்கு எடுத்து வருகின்றனர் காவல்துறையினர். அதனை தொடர்ந்து மேலும் சில ஆசிரியர்களும் அந்த வழக்கில் சிக்கி உள்ளனர். இதனால் அந்த நிறுவனத்தின் மீதான மதிப்பு குறைந்து விட்டது.
பிஎஸ்பிபி பள்ளி என்பது சென்னையில் உள்ள பிரபலங்கள் படிக்கும் பள்ளியாக மாறிவிட்டது. இந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால் பெற்றோர்களின் வருமானம் என்ன இவர்களால் பீஸ் ஒழுங்காக கட்ட முடியுமா என்பதை எல்லாம் விசாரித்ததாக பார்க்கலாம்.
அதுமட்டுமில்லாமல் பிஎஸ்பிபி பள்ளியில் இன்று முன்னணியில் இருக்கும் பல பிரபலங்களும் படித்துள்ளனர். அதில் நடிகை வனிதாவும் ஒருவர். இவரும் அந்தப் பள்ளியில்தான் படித்ததாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அந்தப் பள்ளியில்தான் படித்து வந்தார். ஆனால் அவரால் பீஸ் கட்ட முடியாததால் அவரை பாதியில் துரத்தி விட்டதை குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அண்ணன் தம்பிகளான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இங்குதான் படித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயராம் மகன் காளிதாஸ், சமந்தா கணவர் நாக சைதன்யா, சிரஞ்சீவி மகன் ராம்சரண், அல்லு அர்ஜுன், இயக்குனர் ஆனந்த் ஷங்கர், அனிருத், பாடகி அனுராதா மற்றும் கிரிக்கெட் வீரர் அஸ்வின் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் இதே பள்ளியில்தான் படித்துள்ளனர்.