சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

கோலாகலமாக நடந்த 8 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்.. பாக்கியலட்சுமி சீரியலுக்கு இத்தனை விருதுகளா?

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கும் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்து வருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் 8 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை மற்றும் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் விருதுகளை பெற்றுள்ளனர்.

அவ்வாறு இந்த ஆண்டு விருதுகளை பெற்ற வெற்றியாளர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம். அந்த வகையில் சிறந்த கதாநாயகி காண விருதினை பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா பெற்றிருக்கிறார். அதேபோல் சிறந்த கதாநாயகனுக்கான விருதினை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் பெற்றிருக்கிறார்.

Also Read : டாப் 10 சீரியல்களின் டிஆர்பி லிஸ்ட்.. புத்தம் புது சீரியல்களை இறக்கி டஃப் கொடுத்து வரும் விஜய் டிவி

மேலும் சிறந்த ஜோடிக்கான விருதினை காற்றுக்கென்ன வேலி தொடரில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் பெற்றுள்ளனர். சிறந்த வில்லி என்ற விருதினை பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த டைரக்டர் என்ற விருது மறைந்த தாய் செல்வம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதினை இரண்டு பிரபலங்கள் பெற்றிருக்கிறார்கள். அதன்படி ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வரும் சுவாதி மற்றும் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்ட சிவின் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். சிறந்த மருமகளுக்கான விருதை முத்தழகு தொடரில் முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெற்றுள்ளார்.

Also Read : விஜய் டிவி பிரியங்கா, விஜே ரம்யா வரிசையில் இப்போது அனிதா சம்பத்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடித்த ஜாக்பாட்

சிறந்த அம்மா விருதினை பாரதி கண்ணம்மா தொடர் ரூபா ஸ்ரீ பெற்றுள்ளார். அதேபோல் சிறந்த மகன் என்ற விருதினை பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷால் பெற்றிருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான விருதை பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும், சிறந்த துணை நடிகைக்கான விருதினை தென்றல் வந்து என்னை தொடும் ராதா ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

மேலும் சிறந்த தொகுப்பாளராக மாகாபா மற்றும் பிரியங்கா விருதினை வாங்கியுள்ளனர். ரசிகர்கள் விரும்பும் பாடகராக ரக்ஷிதா விஜய் விருதை பெற்றுள்ளார். சிறந்த காமெடியன் என்ற விருதை குரேஷி பெற்று இருக்கிறார். இதில் பாக்கியலட்சுமி தொடர் அதிக விருதுகளை பெற்று உள்ளது. அதுமட்டுமின்றி சிறந்த சீரியல் என்ற விருதினையும் இந்த தொடருக்கு தான் வாங்கி உள்ளது.

Also Read : அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

- Advertisement -

Trending News