சில பல நாட்களாகவே ஹாட் டாபிக் அலசலில் மிகவும் முக்கிய இடத்தை பிடித்தது திரையரங்கில் தேசியகீதம் வேண்டுமா, வேண்டாமா ?, மேலும் எழுந்து நிற்கவேண்டும் என்பது கட்டாயமா என்பது தான். பலர் இதை ஆதரித்தும், சிலர் இதனை எதிர்த்தும் தங்கள் கருத்துக்களை கூறிவந்தனர்.
சில செலிபிரிட்டிகளின் தனிப்பட்ட கருத்தை நாம் பார்ப்போம்:

அரவிந்த் சாமி- ட்விட்டர்:

Aravind Sami

‘நான் எப்பொழுதுமே தேசியகீதத்திற்கு எழுவது மட்டுமின்றி கூட சேர்ந்தும் பாடுவேன், அதற்கு நான் பெருமை படுகிறேன். ஏன் தியேட்டரில் மட்டும் கட்டாய மயமாக்க வேண்டும் என்பது புரியவில்லை.’

பின்னர் அடுத்து டீவீட்டில் “ஏன் தினமும் அரசு அலுவலகங்கள், நீதிமன்றம், சட்டசபை போன்ற இடங்களிலும்?” என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  இவ்வளவு அருமையான காட்சியை நீக்கலாமா இயக்குனரே ? வைரலாகுது 96 பட டெலீடட் ஸீன்.

கவுதம் கம்பிர் – ட்விட்டர்:

Gautam Gambhir

எப்பொழுதுமே சற்றே கோவக்காரரான கம்பிர், இந்த விஷயத்திலும் சற்று கட்டமாகவே டீவீட்டியுள்ளார் ” கிளுப்புக்கு வெளியில் 20  நிமிடம் காத்திருந்து நிற்கிறீர்கள்.பிடித்த உணவகத்துக்கு வெளியில் 30 நிற்ப்பீர்கள். ஆனால் தேசிய கீதத்திற்க்காக 52 நொடிகள் நிற்பது கடினமா?”

அதிகம் படித்தவை:  பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மெர்சல் சாட்டிலைட் உரிமையை பெரும் தொகைக்கு வாங்கி உள்ளது.!!

வித்யா பாலன் – ‘தும்ஹாரி சுலு’ பட ப்ரோமோஷனில்:

“திரையரங்கில் தேசியகீதம் இசைப்பது தேவையற்றது, இது ஒன்றும் ஸ்கூல் கிடையாது. இது என் தனிப்பட்ட கருத்து தான். தேசப்பற்றை யாரிடமும் திணிக்க முடியாது.

எனக்கு என் நாடு பிடிக்கும், என் நாட்டின் மானம் காக்க நான் செயல்படுவேன். தேசியகீதம் இசைக்கப்படும் பொழுது நீ எழுந்து நில் என்று யாரும் எனக்கு தெரிவிக்க வேண்டியதில்லை.” இவ்வாறு கூறியுள்ளார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:
ரோஜா படத்தில் இருந்தே எங்களுக்கும் தெரியும் அரவிந்த் சாமி நீங்க எப்படி பட்டவர் என்று,சரியான பாயிண்ட்.
அப்ரிடி, வாட்சன் போன்றவரிடம் நெஞ்சை நிமிர்த்தும் பொழுதே நீங்க இப்படிதானே கோவப்படுவீங்க,கூல் ப்ரோ.
சத்தியமா புரியல வித்யா நீங்க என்ன சொல்லவறீங்கன்னு?, இருக்கு ஆனால் இல்லை;அதானே.