புதன்கிழமை, மார்ச் 19, 2025

2021 இல் திருமணம் செய்துக் கொண்ட 4 பிரபலங்கள்.. அதுலயும் இந்த ஜோடி வேற லெவல்

பிரணிதா: 2011ல் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். இப்படத்தைத் தொடர்ந்து பிரணிதா கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் மற்றும் அதர்வாவுடன் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வரும் பிரணிதா சுபாஷ், பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை காதலித்து வந்தார். இந்நிலையில் மே மாதம் 30ம் தேதி இவர்களுக்கு திருமணம் ஆனது.

பாலா: தமிழ் சினிமாவில் அன்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா. சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2016ஆம் ஆண்டு பாடகியான அம்ருதா சுரேஷுடன் பாலாவுக்குத் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். 2019ஆம் ஆண்டு விவாகரத்து ஆகி இருவரும் பிரிந்த நிலையில், தற்போது டாக்டர் எலிசபெத் உதயன் உடன் இவருக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

லிஜோமோல் ஜோஸ்: மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். இதைத் தொடர்ந்து தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை மற்றும் தீதும் நன்றும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம் படத்தில் செங்கேணியாக நடித்திருந்தார். லிஜோமோல் ஜோஸ், அருண் ஆண்டனி இருவருக்கும் அக்டோபர் மாதம் 4ம் தேதி கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.

கார்த்திகேயா: தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா கடந்த மூன்று ஆண்டுகளாக தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ளார். கார்த்திகேயா, அவருடைய காதலி லோஹிதா ரெட்டி இருவருக்கும் நவம்பர் 21ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

Advertisement Amazon Prime Banner

Trending News