Tamil Cinema News | சினிமா செய்திகள்
துரதிர்ஷ்டவசமாக காவு வாங்கிய 2020.. உயிரிழந்த 12 பிரபலங்களின் லிஸ்ட்
சுஷாந்த் சிங் ராஜ்புத் – எம்.எஸ் தோனி என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் சுஷாந்த் சிங் ராஜ் புத். இவர் ஜூன் 14 தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான தில் பெச்சாரா என்னும் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

sushant rajput
எஸ் பி பாலசுப்ரமணியம் – எஸ் பி பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவில் நடிகராகவும், பாடகராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நான்கு மொழிகளிலும் பாடியுள்ளார். கொரானா தொற்று காரணமாக செப்டம்பர் 25ஆம் தேதி மரணம் அடைந்தார். இவரது மரணம் திரைத்துறையில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.

sp balasubramaniam
வடிவேல் பாலாஜி – விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல் பாலாஜி. இவருக்கு வயது 42, ஹார்ட் அட்டாக் மூலம் செப்டம்பர் 10-ஆம் தேதி மரண \மடைந்தார்.

vadivel balaji
வசந்த் குமார் – வசந்த் & கோ உரிமையாளரும், காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான வசந்தகுமார் ஆகஸ்ட் 28ஆம் தேதி கொரானா நோயால் மரணம் அடைந்தார் இவருக்கு வயது 70.

vasanthakumar
பரவை முனியம்மா – பரவை முனியம்மா நாட்டுப்புற பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். ஆனால் தூள் படத்தில் இவர் நடித்த நடிப்பு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாதது ஒன்று. இவர் மார்ச் மாதம் 29ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். இவருக்கு வயது 83 கலைமாமணி போன்ற விருதுகள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

paravai muniyamma
சேதுராமன் – கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் சேதுராமன். இவர் சந்தானத்திற்கு நெருங்கிய நண்பர் ஆவார் , ஜி கிளினிக் உரிமையாளர் சேதுராமன் கார்டியாக் அரெஸ்ட் என்ற நோயின் மூலம் மரணமடைந்தார். இவருக்கு வயது 34.

sethuraman
இயக்குனர் விசு – 1982 ஆம் ஆண்டு ஒரு கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விசு. அதன்பிறகு இவர் அரட்டை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் மீண்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். இவரது வசனத்திற்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கிட்னி ஃபெயிலியர் ஆனதால் மார்ச் 22ஆம் தேதி மரணம் அடைந்தார்.

visu
சக் ஜோன்ஸ் – டாம் அண்ட் ஜெர்ரி சீரியஸ் உருவாக்கியவர் சக் ஜோன்ஸ். பாப்பாய் போன்ற சீரியஸ் மூலமும் பிரபலமடைந்தார். இவர் கதையாசிரியர், இயக்குனர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர். ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி கார்டியாக் அரெஸ்ட் நோயால் மரணமடைந்தார்.

chuck jones
இர்பான் கான் – பாலிவுட் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் இர்பான் கான். இவர் பத்மஸ்ரீ போன்ற பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருக்கு வயது 53, ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று பெருங்குடல் தொற்று நோயால் மரணமடைந்தார்.

irrfan khan
மலையாள இயக்குனர் சச்சி – சச்சி இயக்கத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவருக்கு வயது 48, ஜூன் மாதம் 18 ஆம் தேதி அன்று கார்டியாக் அரெஸ்ட் என்ற நோயால் மரணமடைந்தார்.

sachy
தவசி – வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் நன்கு பிரபலம் அடைந்தவர் தவசி . நவம்பர் 23ஆம் தேதி கேன்சரால் மரணம் அடைந்தார்.

tamil actor thavasi
சித்ரா – விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் பிரபலமடைந்தவர் சித்ரா. இவர் பிரபல ஹோட்டலில் டிசம்பர் மாதம் 9 தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.

chitra
2020ஆம் ஆண்டு பலருக்கும் மோசமான ஆண்டு என்றே கூறலாம் ஒரு பக்கம் மக்கள் அவதிப்பட மற்றொரு பக்கம் மக்கள் கொண்டாடிய நடிகர்கள் இறந்து போக போன்ற பல துயர சம்பவங்கள் இந்த ஆண்டு நடந்துள்ளது.
