Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபலங்கள் வாழ்த்து மழையில் ராதிகா.. ஏன் தெரியுமா?

raadhika

கர்ப்பமாக இருந்த ராதிகாவின் மகள் ரேயானுக்கு குழந்தை பிறந்திருப்பதை அடுத்து, கோலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் நடிகை ராதிகா. 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து, பல படங்களில் நடித்து வெற்றி கண்டார். 80களின் சிறந்த நாயகியாக இன்னும் பெயர் பெற்று இருக்கிறார் ராதிகா. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். நடிகையாக மட்டுமல்லாமல் மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.

ராதிகா, நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார். சரத்குமாருடனான திருமணத்துக்கு முன்னர், இயக்குனர் பிரதாப் போத்தனை முதல் திருமணமும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் இரண்டாவதாகவும் திருமணம் செய்தார். இரண்டு திருமணங்களிலும் ஏற்பட்ட மன கசப்பால் விவகாரத்து செய்தார். இதில் இரண்டாவது கணவருக்கும், ராதிகாவுக்கும் பிறந்தவர் ரயான் ஹார்டி. மகள் மீது அதிக பாசமாக இருப்பவர் ராதிகா.

ரயான் லண்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஸ்போர்ட்ஸ் மேனேஸ்மெண்ட் படித்துள்ளார். ராடான் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அம்மாவின் திருமண புடவையில் ராயன் மணமகளாக இருந்தது எல்லாம் அன்றைய தேதியின் செம வைரலாக பரவியது.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த ரயானுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ராதிகா தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பாட்டியாகி இருக்கும் ராதிகாவிற்கு சினிமா பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top