பிர்மிங்ஹாம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதை நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் ஜூன் 1 முதல் 18 வரை நடக்கிறது. இத்தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. பிர்மிங்ஹாமில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தைப் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களுடன் நடிகர் தனுஷ் உள்ளிட்ட சினிமா பிரலங்களும் கண்டுகளித்தனர்.

இப்போட்டியிங் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 319 ரன்கள் குவித்தது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோற்றது. 124 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி மீண்டும் பாகிஸ்தான் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது.

அதிகம் படித்தவை:  கார் விபத்தில் சிக்கிய கவுதம் மேனன். அவரை காப்பாற்ற உதவியவர் இவர் தான்.

இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்த நிலையில், இந்திய அணி இப்போட்டியில் முத்திரை பதித்துள்ளது. இதனை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.