தொடரி படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை. இந்த படத்தின் இசை விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றபோது, தனுஷ், கீர்த்தி சுரேஷை ஆகிய இருவரையும் மேடையில் பேசியவர்கள் மானாவாரியாக புகழ்ந்து தள்ளி விட்டனர்.

அப்போது தனுஷைப்பற்றி பேசும்போது, இவர் எம்ஜிஆர், சிவாஜி ஆகிய இருவரையும் சேர்த்து செய்யப்பட்ட கலவை. அந்த அளவுக்கு அவரது நடிப்பு யதார்த்தமான உள்ளது. அவரை மாதிரி ஒரு சிறந்த நடிகர் தமிழ் சினிமாவில் இல்லை. அந்த வகையில் ஹாலிவுட் தரமுள்ள ஹீரோ என்றார்கள். அதோடு, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் இளைய சூப்பர் ஸ்டார் என்று கோஷம் போட, மேடையில் பேசியவர்கள் இந்த படத்தில் இருந்து தனுசுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டுமாறு கேட்டுக்கொண்டார்கள்.