மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்தது தயாரிக்கும் படத்துக்கு “செக்க சிவந்த வானம்” என தலைப்பு வைத்தனர். இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Chekka Chivantha Vaanam – CCV

மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். தமிழில் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ccv clap board

இப்படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னை புறநகர் ஈசர்ல் துவங்கியுள்ளது.
அதில் தன் புது கெட்- அப்பில் உள்ள சிம்புவின் போட்டோ வெளியாகி வைரலாகியுள்ளது.

SIMBHU – STR