செக்க சிவந்த வானம்

மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்தது தயாரிக்கும் படத்துக்கு “செக்க சிவந்த வானம்” என தலைப்பு வைத்தனர். இப்படத்தில் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

CCV

மணிரத்தினம் இயக்கும் இப்படத்தில், இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர். திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். கிரேட்டிவ் இயக்குனராக பிஜோய் நம்பியார். ஏகா லஹானி உடை வடிவமைப்பு. கலை கவனிப்பது ஷர்மஷிதா ராய்.

Manirathinam

சந்தோஷ் சிவன்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மற்றும் மணிரத்தினம் கூட்டணி எப்பொழுதுமே சூப்பர் ஹிட் தான். தளபதி , ரோஜா, இருவர், டில் சே, ராவணன் போன்ற படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தில் அவர்கள் 6 வது முறையாக இணைகின்றனர்.

Santosh Sivan

ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு இருக்கும் போட்டோ வெளிவந்து வைரல் ஆனது.

ccv

இந்நிலையில் சந்தோஷ் சிவன் “தளபதி நாட்களில் இருந்தே” என்ற தலைப்புடன் புதிய போட்டோ ஒன்றை டீவீட்டுயுள்ளார். இதில் தளபதி படத்தில் உள்ள மணிரத்தினம் மற்றும் அரவிந்த் சாமி இருவரும் ஒரே பிரேமில் உள்ளனர்.

ccv

இப்படத்தில் அருண் விஜய், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், சிம்பு, அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் , மாடல் டயானா எர்ரப்பா மற்றும் பலர் நடிக்கின்றனர்.