Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே பிரேம்மில் நான்கு ஹீரோக்கள் ! வைரலாகுது செக்க சிவந்த வானம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ !
செக்க சிவந்த வானம்
மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைக்கா லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்தது தயாரிக்கும் படம் “செக்க சிவந்த வானம்”.இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்கு சந்தோஷ் சிவன், எடிட்டிங்கிற்கு ஸ்ரீகர் பிரசாத் கூட்டணி அமைத்துள்ளனர்.

CCV
மிக வேகமா நடந்து வந்த இந்த மல்டி – ஸ்டார்கள் நடிக்கும் படம் சினிமா தயாரிப்பாளர்களின் போராட்டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது சினிமா வேலைநிறுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து மணிரத்னத்தின் ‘செக்க சிவந்த வானம்‘ படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. ஏற்கனவே சிம்பு, அரவிந்த் சாமி, அதிதி ராவ் , விஜய் சேதுபதி போன்றவர்களின் கெட் – அப் போடோக்களை பிளாக் அண்ட் வாய்ட்டில் தன் ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் சந்தோஷ் சிவன்.
The Foursome in CCV pic.twitter.com/OKOupz6y84
— SantoshSivanASC. ISC (@santoshsivan) April 30, 2018
இந்நிலையில் “FOURSOME ” என்ற தலைப்பில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகிய நான்கு நபர்களும் இருக்கும் ஒரு போட்டோவை உப்லோஅது செய்துள்ளார்.

CCV
இந்த போட்டோ வைரலாகி வருகின்றது. திலீப் சுப்பராயன் இப்படத்திற்கு ஸ்டன்ட் பணிகளை கவனிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். கிரேட்டிவ் இயக்குனராக பிஜோய் நம்பியார். ஏகா லஹானி உடை வடிவமைப்பு. கலை கவனிப்பது ஷர்மஷிதா ராய்.
