Tamil Nadu | தமிழ் நாடு
பொள்ளாச்சி சம்பவம்.. சிபிசிஐடி இமெயில் ஐடி அறிவிப்பு.. மக்கள் தெரிந்த உண்மையை சொல்லுமாறு வேண்டுகோள்
பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து சிபிசிஐடி பொதுமக்களிடம் தெரிந்த செய்திகளை இமெயில் ஐடி மூலம் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் பொதுமக்களிடம் தங்களுக்குத் தெரிந்த செய்திகளை இமெயில் ஐடி மூலம் தெரிவிக்குமாறு அறிவித்துள்ளது.
இந்த இமெயில் ஐடியில் தெரிவிக்கப்படும் செய்திகளோ, வீடியோக்களோ யாருக்கும் தெரிவிக்கப்படாது என உறுதி கூறியுள்ளனர்.
சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ள இமெயில் ஐடி [email protected] இந்த இமெயில் ஐடி மூலம் உண்மையான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் தைரியமாக தெரிவிக்கவும் என போலீசார் மக்களிடையே கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் 800 அவினாசி சாலை, கோவை என்ற முகவரியிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்றோ, பொதுமக்கள் விவரங்கள் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் மக்களிடையே கேட்டுக் கொண்டுள்ளனர்.

cbcid-contact-pollachi
