காவேரி மேலாண்மை அமைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து இடத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது, தமிழகத்தில் பல இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் வரை போராட்டத்தில் குதித்துள்ளார்கள் அதனால் தமிழகத்தில் போராட்டம் மிகவும் வலுபெற்று வருகிறது. மேலும் ஸ்டர்லைட் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்க எம்பஸ்ஸி இந்தியாவில் வாழும் அமெரிக்கர்களை பாதுகாப்போடு இடுக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது, காவேரி மேலாண்மை அமைக்க கோரி நாளை தி.மு.க சார்பில் தமிழகத்தில் முழு கடை அடைப்பு போராட்டம் பெரிய அளவில் நடக்கபோகிறது அதேபோல் நேற்று ஆ.தி.மு.க சார்பில் உண்ணாவிருதம் போராட்டம் நடத்தினார்கள், மேலும் பல இடத்தில் பல கட்சிகள் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் இன்று மதுரையில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள் மேலும் திருச்சி உச்ச நீதி மற்றம் அருகே உயர் மின் அழுத்த கம்பத்தின் உட்ச்சியில் ஏறிக்கொண்டு சமூக நீதி மாணவர்கள் பலர் போராட்டம் நடத்தினார்கள் அதனால் அவர்களை போலீஸ் கைது செய்துள்ளார்கள்.

இப்படி காவேரி பிரச்சனைக்காக தமிழகம் மற்றும் கர்நாடகவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடப்பதால்  இங்கு வாழும் அமெரிக்கர்களை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க எம்பஸ்ஸி அறிவித்துள்ளது. மேலும் போராட்டம் நடக்கும் இடத்திற்கு காரணம் இல்லாமல் செல்லவேண்டாம் எனவும் அந்த செய்தியில் அறிவித்துள்ளார்கள்.

போராட்டங்கள் தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையில் பெரிய அளவில் நடைபெற்று வருவதால் அந்த எல்லைக்கு போகவேண்டாம் எனவும் மேலும் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்படலாம் என அறிவித்துள்ளார்கள் அமெரிக்க தூதரகம். மேலும் காவேரி பிரச்சனை அமெரிக்கா வரை சென்றுள்ளதால் விரைவில் காவேரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது.