முக்கிய இயற்கை வளங்களான விளை நிலங்களும், நிலத்தடி நீரும் அழிக்கப்பட்டு வருவது உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது.

இந்நிலையில், உலக மக்கள் தொகை சுமார் 900 முதல் ஆயிரம் கோடியை எட்டும் எனவும், அப்போது உலகம் கடுமையான உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும் என ஐ.நா., தெரிவித்துள்ளது.

ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தொகை பெருக்கம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் விவசாயம் சுருங்கி வருகிறது.

குறிப்பாக தண்ணீர் பஞ்சம் உலகம் முழுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் தண்ணீர் பஞ்சம் தீவிரமடைந்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, உலக அளவில் சுமார் 80 சதவீதம் பேர் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்போது இருப்பது போன்று நிலம் மற்றும் தண்ணீர் மாசுபாடு தொடருமானால், உலகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

புவி வெப்ப மயமாதலால் உலக அளவில் மழை அளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டுமின்றி, நிலத்திற்கு மேலுள்ள நீர் ஆதாரங்களும் சுருங்கி வருகின்றன.

1960 முதல் 2012ம் ஆண்டு வரை உயர்ந்து வந்த விவசாய நிலங்கள், வெப்பமயமாதல், காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் குறைந்து வந்துள்ளது.

அதே சமயம், மக்கள்தொகை பெருக்கத்தால் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.

உற்பத்தி குறைவாக உள்ளதாலும், தேவை அதிகரிப்பதாலும் வளர்ந்து வரும் நாடுகளில் தண்ணீர் மற்றும் உணவு தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே எங்களுக்கு தண்ணீர் இல்லாம, எங்க விவசாயிங்க தற்கொலை செய்துக்கிட்டு சாகிறான்.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் தி்டடம் கொடு வந்து எங்க சந்ததியினரின் வாழ்க்கையை ஏன் வீணாக்குகிறீர்கள்.

இந்தியாவுக்கு நாங்க என்ன குப்பைத் தொட்டியா, கழிவுகளை கொண்டு வந்து கொட்டுறீங்க, இத கேக்க நாதியில்லை.

கடலில் கச்சா எண்ணெய்யை கொட்டுறீங்க, கடலில் கலந்த எண்ணெய்யை அள்ள வாலிக் கொடுக்குறீங்க என்னடா உங்க அறிவு என்று இளைஞா்கள் குமுறி வருகின்றனா்.

நாங்கள் வளா்ச்சியடையவே வேண்டாம். உலக நாடுகளுக்கு உணவு வழங்கு தொழிலை செய்கிறோம். எங்களை விட்டுவிடுங்க இவ்வாறு போராட்ட இளைஞா்கள் கூறிவருகின்றனா்.

நிலத்தடி நீர் மட்டத்தை குறைப்பதையும், காடுகளை அழிப்பதையும் நிறுத்துங்க என்று ஐ.நா சபை சொல்லுது அதை கேளுங்க எங்களை வாழ விடுங்க என்று கோரிக்கை வைக்கின்றனா் தமிழக ஏழை மக்கள்.