Connect with us
Cinemapettai

Cinemapettai

catherine-teresa-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

60 வயது நடிகருடன் ஜோடி போடும் கேத்தரின் தெரசா.. காலம் போன காலத்தில் எதுக்குயா ஹீரோ வேஷம்!

சினிமாவை பொருத்தவரை அப்பா வயது நடிகருடன் ஜோடி போட வேண்டியுள்ளது. சிலருக்கு இதில் விருப்பமில்லையென்றால் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து மனதை மாற்றி விடுகின்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே மிகவும் பிரபல நடிகையாக வலம் வருபவர் கேத்தரின் தெரேசா. தமிழில் கலகலப்பு 2, கதகளி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறிக் கொண்டே இருக்கிறார். தயாரிப்பாளருக்கு முறைவாசல் செய்தாலும் பட வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை.

அதற்காக தற்போது 60 வயது நடிகர் ஒருவருடன் ஜோடி போடுவதற்காக சுமார் ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் பேசி வருகிறாராம் கேத்தரின் தெரேசா.

அவர் வேறு யாரும் இல்லை. தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. நடிக்கும் படம் எல்லாம் தோல்வியை சந்தித்தாலும் படம் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்று விடுகிறார்.

தற்போது அடுத்ததாக பாலகிருஷ்ணா நடிக்கும் கேஎஸ் ரவிக்குமார் படத்தில் கேத்தரின் தெரசா தான் அவருடன் ஜோடி போட உள்ளார். இந்த செய்தி வெளியானதிலிருந்து சினிமா வட்டாரங்களில் கேத்ரின் தெரசாவை பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்களாம் மற்ற நடிகைகள்.

Continue Reading
To Top