தமிழ் சினிமாவில் பல திறமைகளை வாய்ந்த நடிகர்கள் வெகு குறைவாக உள்ளனர். அதிலும் சிம்பு தற்போது தனது இசைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாளை வெளியாக உள்ள 90ml திரைப்படத்தில் சிம்பு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் மரண மட்ட என்ற பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் பெண்களின் வாழ்க்கை சூழ்நிலையை மையப்படுத்தி இருக்கும் மற்றும் நகரத்து பெண்கள் எப்படி வாழ்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்பது இப்படத்தின் ட்ரைலர் முலம் தெரிகிறது.
சிம்பு இசை அமைக்கும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.