police-saves-2-children

உண்மையான பாகுபலி இவர்தான்.. 1.5கிமீ இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்த போலீஸ்.. வீடியோ

இந்தியாவில் பல மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களை காப்பாற்றுவதற்காக இந்திய ராணுவம் பெருமளவில் களம்  இறங்கி உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் ஒரு காவல்துறை இரண்டு குழந்தைகளை தனது தோள் பட்டையில் வைத்துக்கொண்டு 1.5 கிலோ மீட்டர் தண்ணீருக்குள் நடந்து வரும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தனது உயிரை பணையம் வைத்து இரு குழந்தைகளை காப்பாற்றியுள்ளார். உலக அளவில் அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.